ஷூட்டிங்கிற்கு சென்றபோது விபத்தில் 2 நடிகர்கள் பலி

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஷூட்டிங்கிற்கு வாகனத்தில் சென்ற நடிகர்கள் இருவர் விபத்தில் பலியாகினர். நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தின் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற தொடர் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ அகுய்லர் ஆகியோர் கலிபோர்னியா அடுத்த முலேஜ் பகுதியில் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகர் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ அகுய்லர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களுடன் சென்ற மேலும் ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா கலாசாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories: