பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி: 1-0 என நியூசிலாந்தை வீழ்த்தி நுழைந்தது

தோகா: 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நவம்பர் 21ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார்  நேரடியாக தகுதி பெற்ற நிலையில் தகுதி சுற்று பிரேசில், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் தகுதி சுற்று ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா பெனால்டி ஷூட்-அவுட்’டில் 5-4 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 31வது அணியாக தகுதி பெற்றது.

கடைசி அணிக்கான பிளே ஆப் ஆட்டத்தில் நேற்றிரவு  தோகாவில் கோஸ்டாரிகா-நியூசிலாந்து அணிகள் மோதின.  இதில் ஆட்டம் தொடங்கிய 3வதுநிமிடத்திலேயே கோஸ்டாரிகாவின் ஜோயல் கேம்ப்பெல் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். கடைசி வரை நியூசிலாந்தால்  கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா வெற்றி பெற்று கடைசி அணியாக உலககோப்பைக்கு தகுதி பெற்றது. ஒட்டுமொத்தமாக அந்த அணி 6வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கிறது. ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் இடம்பிடித்துள்ள இ பிரிவில் கோஸ்டாரிகா இணைந்துள்ளது.

Related Stories: