நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் அபிஷேக் மனைவியிடம் சிபிஐ தீவிர விசாரணை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ரூ.1,300 கோடி சட்டவிரோத  பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான  அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகிறது.  இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா அளித்த பதில்கள் திருப்தி அளிக்காததால்ல், நேற்று மீண்டும் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள வீட்டில் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் ஒரு பெண் அதிகாரியைக் கொண்ட 8 பேர் கொண்ட சிபிஐ குழு நேற்று காலை 11.30 மணி முதல் விசாரணை நடத்தியது. ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு மம்தா அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரது மருமகனின் மனைவியிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் பழிவாங்கும் ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கை வெட்கக் கேடானது என திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது.

Related Stories: