நீளம் தாண்டுதலில் ஜெர்மனி பாராலிம்பிக் வீரர் புதிய உலக சாதனை: விளையாட்டு மீது தீராத காதல் கொண்டதால் 3-வது முறை தங்கம் வென்றார் மார்கஸ் ரெம்

ஆஸ்திரியா: தனது 14 வயதில் விபத்தில் வலதுகாலை இழந்த ஜெர்மனி வீரர் மார்கஸ் ரெம் பாராலிம்பிக் நீளம் தாண்டுதலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். தற்போது 33 வயதாகும் ரெம் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் உலகப்புகழ்பெற்றவர். தொடர்ந்து 3 பாராலிம்பிக் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தை தக்கவைத்து கொண்ட பெருமைக்குரியவர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள இன்ஸ்பிரக் நகரில் நடைபெற்ற கோல்டன் ரூஃப் சாலஞ்ச் தடகள போட்டியில் பங்கேற்ற மார்கஸ் ரெம் 28 புள்ளி 41 அடி தாண்டி புதிய உலகசாதனையை படைத்துள்ளார். தனது 14 வயதில் அலைச்சறுக்கு போன்ற வெக் போர்ட்டிங் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தில் வலதுகாலை இழந்தார். என்றாலும், விளையாட்டு ஆர்வம் தணியவில்லை. அதுமுதல் நீளம் தாண்டுதல் போட்டியில் தீவிரம் காட்டி வரும் ரெம் தற்போது அவ்விளையாட்டில் தனது முந்தைய உலக சாதனையை புதுப்பித்துக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஐரோப்பிய பாராலிம்பிக் போட்டியில் 28 புள்ளி 28 அடி தாண்டி சாதனை படைத்திருந்தார்.     

Related Stories: