ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பரிந்துரை குழு அமைப்பு ஜவாஹிருல்லா வரவேற்பு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மனிதநேய மக்கள் கட்சியும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டுமென வலுவாக கோரிக்கைகளை வைத்தது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: