மாணவிகளிடம் ஆபாசப் பேச்சு: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி தலைவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி தலைவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ரோடு தெற்குத்தெரு பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி என்ற பெயரில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் டிஎம்எல்டி, கேட்டரிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வெளியூர் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த கல்லூரியின் நிர்வாகி தாஸ்வின் ஜான் கிரேஸ். பாஜக சிறுபான்மை பிரிவு பிரமுகர்.

இவரது கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு இவர் அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும் இவர் வீடியோ காலில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இது குறித்து சக மாணவிகளிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை 9.30 மணியளவில் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்ய கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: