பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எம்எல்ஏ ஆய்வு

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ சந்திரன் ஆய்வு செய்தார். பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேருராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ நேற்று ஆய்வு நடத்தினார். இதில், குறிப்பாக  தமிழக அரசு நகர்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்பாடுகள் குறித்தும், குடிநீர், சாலைகள், சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில், வாணிவிலாசபுரம்  காலனிப் பகுதியில்  வீட்டு மனைகளுக்கு செல்ல போதிய  சாலை வசதி இல்லாத நிலையில் 23 அடி பொது சாலை இருப்பதாக செயல் அலுவலர் வழங்கிய  சான்று ரத்து செய்ய வேண்டும் என பேரூர் திமுக கவுன்சிலர்கள் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ விடம்  புகார் செய்தனர். மேலும், பொதுமக்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து  தமிழக அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைக்க  பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ், பொறியாளர் சிவக்குமார்,  பேரூர் திமுக செயலாளர் டி.ஆர்.கே. பாபு,  முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் டி.ஆர்.கே.ரவி  திமுக  நிர்வாகிகள் ஜெ.எம்.சங்கரன், டி.எம்.சுகுமாரன், என்.எஸ்.மோகன், பேரூர் கவுன்சிலர்கள்  வி.கே. சுப்பிரமணி, எம்.டி.பிரகாஷ், அனுஷா சிவா,  பாரதி கருணா ஆகியோர் உடனிருந்தனர்

Related Stories: