சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக ஆய்வு!: ஒத்துழைப்பு தர மறுக்கும் தீட்சிதர்கள்..அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்ததையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிபிரிவு, கோயில் நிர்வாகம், சிற்றம்பலம் மேடை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழு அமைத்தது. இதற்கு தொடக்கம் முதலே தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர்.

ஆனால் மாலை வரை காத்திருந்தும் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. 2வது நாளாக அதிகாரிகள் இன்றும் அங்கு ஆய்வுக்காக சென்ற நிலையில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தீட்சிதர்கள் மறுத்தனர். கோயில் செயலாளர் மற்றும் நிர்வாகம் தரப்பில் யாரும் இல்லை என்று தெரிவித்த தீட்சிதர்கள், செயலாளர் அறையின் சாவியும் தங்களிடம் இல்லை என்று அதிகாரிகளிடம் கூறினர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாகவும், கோயிலில் நடந்தவை குறித்து அறிக்கை தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: