பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை8: பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் பகுதியில் ஆரணியாற்றில் தடுப்பணை பகுதியில் சிலர் மாட்டு வண்டிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணிஈஸ்வரி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையர்கள் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அங்கு போலீசார் வருவதை பார்த்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் வண்டிகளை ஆற்றிலே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து தப்பி ஓடிய மாட்டுவண்டி உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். பலவீனமடையும் தடுப்பணைவிவசாயிகள் கூறுகையில், `ஆரணியாற்று பகுதியில் ஒரு மாத காலமாக தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தடுப்பணை அருகே மணல் இருப்பதால் தடுப்பணை பலவீனம் அடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: