அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

காரைக்குடி: அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடியில் தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத்தொடர்ந்து இன்று முதல் 13ம் தேதி வரை பல்லக்கு, சிம்மம், சிவிகை, வெள்ளி, சொர்ணகருடவாகனம், யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் காலை, மாலை என இருவேளையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் வீதி உலா நடக்கிறது. விழா முக்கிய நிகழ்ச்சிகளாக 11ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 14ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 17ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடாசலம்செட்டியார், செயல் அலுவலர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.

Related Stories: