லாசேன்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘ஐவர் ஹாக்கி உலக கோப்பை’ தொடரில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.லாசேன் நகரில் நடந்த இத்தொடரில் ஆண்கள், மகளிர் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளும், மகளிர் பிரிவில் இந்தியா, போலந்து, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்து, உருகுவே அணிகளும் விளையாடின.ஆண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்தது. போலந்து தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2வது இடம் பிடித்தது. இதையடுத்து இரு அணிகளும் விறுவிறுப்பான பைனலில் மோதின.அதில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வென்று முதலாவது ஐவர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய தரப்பில் தாமி பாபி, ரஹீல் முகமது தலா 2 கோல், குரிந்தர், சஞ்ஜெய் தலா ஒரு கோல் அடித்தனர்.