புதுச்சேரியில் வாக்களித்த பிரான்ஸ் குடியுரிமைவாசிகள்

புதுச்சேரி: கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 4,463 பிரெஞ்சு குடிமக்கள் தங்களது சட்டமன்ற பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாக்குப்பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ ஜூன் 5ம்தேதி முதல் சுற்றிலும் அதனை தொடர்ந்து ஜூன் 19ல் 2ம் சுற்றிலும் வாக்களிக்கலாம் என்று பிரான்ஸ் அறிவித்தது. அதன்படி நேற்று, முதல் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. புதுச்சேரியில் 2 மையங்கள், சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒரு மையம் என 4 இடங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 6 தனித்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று நடந்த முதல் சுற்று தேர்தலில் 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதரகத்தில் பிரான்ஸ் குடியுரிமைவாசிகள் வாக்களித்ததனர்.

Related Stories: