லாசேன்: ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக, அணிக்கு தலா 5 பேர் மட்டுமே பங்கேற்கும் ‘ஐவர் ஹாக்கி உலக கோப்பை’ தொடர் சுவிட்சர்லாந்தின் லாசேனில் இன்று தொடங்குகிறது.கால்பந்து, ஹாக்கி விளையாட்டுகளில் அணிக்கு தலா 11 பேர் விளையாடுவது வாடிக்கை. ஐவர் கால்பந்து, எழுவர் கால்பந்து போட்டிகள் ஏற்கனவே அறிமுமாகி ஓரளவு பிரபலமாகியும் உள்ளன. ஆனால், ஹாக்கியில் சமீபத்தில்தான் ஐவர் ஹாக்கி அறிமுமானது. தற்போது உலக கோப்பை போட்டியும் நடைபெற உள்ளது. இதில் வீரர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, டி20 போல போட்டிக்கான நேரமும் 3ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.
லாசேனில் மகளிர், ஆடவர் பிரிவுகளில் நடக்கும் இந்த தொடரில் தலா 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தையும், மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் உருகுவேயையும் எதிர்கொள்கிறது.