முன்னாள் மாவட்ட செயலாளர் பயன்படுத்திய அலுவலகம் இடிப்பு: அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் உச்சகட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகிகள் இடையேயான கோஷ்டி பூசல் காரணமாக ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த  அம்மா இல்லம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு எற்பட்டது. திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் முன்னாள் மாவட்டம் செயலாளர் பெருமாள் நகர் கே. ராஜன் காட்சி அலுவலகம், கணினி பயிற்சி கூடம், தயாள் பயிற்சி கூடம் ஆகிய வற்றை நடத்தி வந்தார். கொரோனா காரணமாக அம்மா இல்லம் மூடப்பட்டு செயல் படாமல் இருந்து உள்ளது. குத்தகை அடிப்படையில் அம்மா இல்லம் செயல் பட்டு வந்த இடத்தை மற்றோரு அதிமுக பிரமுகர் சஞ்சீவி ராஜன் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நாளிரவு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அம்மா இல்லத்தை சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கே. ராஜன் ஆதரவாளர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக பிரமுகரே இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மா இலத்திற்கு எதிரே அரசு சார்பில் போடப்பட்டுருந்த இரும்பு வேலியை அறுத்து எறிந்து அத்துமீறி  உள்ளை சென்று அம்மா இல்லத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். அம்மா இல்லத்தை நடத்தி வந்த பெருமாள் நகர் ராஜன் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டவர்.

Related Stories: