ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் மற்றும் மாநெல்லூர் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் உஷா தர், லாரன்ஸ் ஆகியோர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பழங்குடியினர் கோரிக்கையினையேற்று ஈகுவார்பாளையம் ஊராட்சியில் இலவசபட்டா வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஊராட்சி தலைவர் உஷாதர், ஊராட்சி செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், துணை ஆட்சியர் மகாபாரதி, வட்டாச்சியர் ராமன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், பிடிஒ வாசுதேவன், ஒன்றிய கவுன்சிலர்கள் மு. மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், முர்த்தி, சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, ரவி, மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.தர், பொன்னேரி அரசு வழக்கறிஞர் பல்லவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஏழை எளிய 144 பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஊக்கத்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, ஒன்றிய பொருளாளர் பரத்குமார், துணைத் செயலாளர் இயேசு ரத்தினம், மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், பேரூர் செயலாளர் அறிவழகன், மாதர்பாக்கம் மனோகரன், ஈகுவார்பாளையம் துணைத்தலைவர் சௌந்தரி மகேஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: