நத்தம் அருகே புரவி எடுப்பு திருவிழா

நத்தம்: நத்தம் அருகே சாத்தாம்பாடியில் உள்ள வீரமுடையான், வேட்டைக்காரன் அய்யனார் மற்றும் கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி மே20ந் தேதி சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 27ந் தேதி வீரமுடையான், வேட்டைக்காரன் சுவாமிகள் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது.

பின்னர் நிகழ்ச்சியில் சுவாமிகள் இருப்பிடம் சென்றதையடுத்து திருவிழா நிறைவடைந்தது. இந்நிலையில் அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் புரவி எடுப்பு திருவிழா வீதிகள் வழியாக நேற்று முன்தினம் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: