மகாராஷ்டிராவில் பிஏ.4, பிஏ.5 வைரஸ் பரவல்

புதுடெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்றின் புதிய வகை வைரசான பிஏ.4, பிஏ.5 ஆகிய தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இதுவரை மொத்தம் 7 நோயாளிகள் மேற்கண்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு நோயாளிகள் பிஏ.4 தொற்றும், மற்ற நோயாளிகள் பிஏ.5 தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்.

இதுகுறித்து தொற்று தடுப்பு நிபுணர் டாக்டர் பிரதீப் அவதே கூறுகையில், ‘பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவை ஒரே வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்றாகும். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் கவலைக்கிடமாக இல்லை. கடந்த மே 22ம் தேதி தமிழகத்தில் பிஏ.4 தொற்று ஒருவருக்கும், தெலங்கானாவில் பிஏ.5 தொற்று ஒருவருக்கும் ஏற்பட்டது’ என்றார்.

Related Stories: