திருமழிசை பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது. பேரூராட்சி தலைவராக வடிவேலுவும், துணைத்தலைவராக மகாதேவனும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர்.நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலை தேர்தல் அலுவலர் சேகர், உதவி தேர்தல் அலுவலர் ரவி ஆகியோர் நடத்தினர்.

இதில் சுயேச்சை வேட்பாளர் லதா நியமன குழு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வும் நடைபெற்றது. அதன்படி திமுகவை சேர்ந்த விஜயலட்சுமி வேலு, அதிமுகவை சேர்ந்த வேணுகோபால், பிரியா சுரேஷ்குமார், ஜெயசுதா வேணுகோபால் ஆகிய 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.

Related Stories: