மாற்றுத்திறனாளிகள் நலத்துறை விழாவில் 181 பயனாளிகளுக்கு ரூ.82.25 லட்சம் உதவி

ஊட்டி : நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த விழாவில் 181 பயனாளிகளுக்கு ரூ.82.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வரவேற்றார். ஆ.ராசா எம்.பி, தலைமை வகித்தார்.

அரசு தலைமை கொறடா ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், 65 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது. 9 பயனாளிகளுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் திறன்பேசிகள் வழங்கப்பட்டன. 8 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

மேலும், 17 பயனாளிகளுக்கு ரூ.1.08 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 8 பயனாளிகளுக்கு ரூ.76 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. 5 பயனாளிகளுக்கு ரூ.1,250 மதிப்பில் எல்போ ஊன்று கோல்களும், 19 பயனாளிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 415 மதிப்பில் காதொலி கருவிககளும் வழங்கப்பட்டது.

9 பயனாளிகளுக்கு ரூ.85 ஆயிரத்து 500 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 500 மதிப்பில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது. 2 பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 570 மதிப்பில் காதொலி கருவிகள் வழங்கப்பட்டன.

இது தவிர 4 பயனாளிகளுக்கு ரூ.14 ஆயிரத்து 500 மதிப்பில் மாற்றுத்திறனாளி நல வாரிய திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகையும், ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற 12 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.7 ஆயிரத்து 750 மதிப்பிலான பரிசு தொகையும், 13 பயனாளிகளுக்கு ரூ.13.66 லட்சம் மதிப்பில் செயற்கை அவையங்களும் வழங்கப்பட்டது.

மேலும், 8 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 250 மதிப்பில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சிகள் என மொத்தம் 181 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.82.25 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆ. ராசா எம்.பி, வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊட்டி எம்எல்ஏ. கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், ஊட்டி நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், ெஜஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி முதல்வர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: