நாமகிரிப்பேட்டையில் பப்பாளி விலை வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை

நாமகிரிப்பேட்டை :  நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம், திம்மநாய்கன்பட்டி, வேப்பில்லைக்குட்டை, சிங்கிலியங்கோம்பை, மத்துருட்டு, குருவாளா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 50 எக்கர் பரப்பளவில் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் பப்பாளி பழங்கள் மரத்திலேயே அழுகி காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கருக்கு 850 முதல் 900 வரை பப்பாளி கன்று நடவு செய்யலாம்.

நடவு செய்து 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். தொடர்ந்து 4 மாதங்கள் அறுவடை செய்யலாம், உரம், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் என ஏக்கருக்கு ₹30,000 முதல் ₹35,000 வரை செலவாகிறது. தற்போது விவசாயிகளிடம் நேரடியாக தோட்டத்தில் அறுவடை செய்யும் வியாபாரிகள், கிலோ ₹9 முதல் ₹11 வரை மட்டுமே வாங்கி செல்வதால், பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் உரிய விலைக்காக பழங்களை அறுவடை செய்யாமல் காத்து இருக்கிறோம். தற்போது மரங்களிலேயே பழங்கள் காய்ந்து வருகிறது,’ என்றனர்.

Related Stories: