தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது ஏன் : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!!

சென்னை : சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது ஏன் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மதுரவாயல்- துறைமுகம் இடையில் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் உள்பட ரூ.31,500 கோடியில் 11 திட்டங்ளை பிரதமர் மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரமாண்ட விழாவில் தொடங்கி வைத்தார்.

இதனிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா தொடங்குவதற்கு முன்னதாக  தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த விழாவில் காணொலி வாயிலாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். பிரதமர் மோடி முன்னிலையில் பாடலை தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்கள் பாடினர். அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் காணொளி வாயிலாக பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் தாய்  பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் நேற்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: