திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த பாம்புகள்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு பத்மாவதி விசாரணை மையம் அருகே உள்ள பாண்டவா விருந்தினர் மாளிகையில் நாகபாம்பு ஒன்று வந்தது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். இதேபோன்று ஜி.என்.சி சோதனை சாவடி அருகே உள்ள தேவஸ்தான தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு இருப்பதை பார்த்த ஊழியர்கள் பாம்பு பிடிக்கும் ஊழியர் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு சென்ற பாஸ்கர் அங்கிருந்த சாரைப் பாம்பையும் பிடித்தார். இரண்டு பாம்புகளையும் பத்திரமாக அவ்வாச்சாரி கோணாவில் உள்ள பள்ளத்தாக்கில் பத்திரமாக கொண்டு சென்று விட்டார். இதனால் அங்கிருந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: