இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மும்பை மாநகர காவல் அறிவிப்பு

மும்பை: இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனடிப்படையில் மும்பையில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் தெரிவித்துள்ளது.  இந்த விதி 15 நாட்களில் அமலுக்கு வரும் எனவும் விதியை மீறினால் ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும் என மும்பை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் சென்னையிலும் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: