கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நுங்கு வியாபாரம் விறுவிறுப்பு

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நுங்கு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.தினசரி காலை நேரங்களில் கிராமங்களில் இருந்து நுங்கு வியாபாரிகள் சாக்கில் கட்டி கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் ஓரங்களில் கொட்டி நுங்குகளை சீவி விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். நுங்கு இயற்கை முறையில் விளைந்தது என்றும் விலை குறைவாக கிடைப்பதாகவும் கூறுகிறர்கள். பேருந்து பயணிகளும், பொதுமக்களும் தினசரி வாங்கி செல்கிறார்கள். நுங்கு வாங்குபவரை விசாரித்தபோது நுங்கு குறிப்பிட்ட காலம் தான் கிடைக்கும் எனவும் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாது என்றும் உடலுக்கு ஏற்ற இயற்கையானது நுங்கு என கூறுகிறார்கள்.

Related Stories: