கோடை மழையால் வாழை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில்   தென்னைக்கு அடுத்தப்படியாக, மானாவாரி பயிர்களான நிலக்கடலை, தட்டைபயிர், சோளம் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும் பல கிராமங்களில் விசாயிகள் வாழை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுவட்டாரத்தின் பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

ஆழியார், கோட்டூர், சமத்துர், பொன்னாபுரம், ஒடையக்குளம், வடக்கிபாளைம், சூலக்கல், நெகமம், சந்திராபுரம், சேத்துமடை, கோமங்கலம், சரளபதி உள்ளிட்ட பல பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை பெய்வதற்கு முன்பாக வாழை நடவு செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி மே மாதம் மாதத்திலும், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி நவம்பர் மாதமும் வாழை நடவு செய்யப்படுகின்றன.  

இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக கோடை மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில், பல சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே விவசாயிகளை வாழை நடவு செய்துள்ளனர். இதற்கிடையே இந்த மாதத்தில் பலவாரமாக பெய்த மழையால், பல்வேறு கிராமங்களில் வாழைகள் செழிக்க ஆரம்பித்துள்ளது.

சில கிராமங்களில், ஆள் உயரத்துக்கு வாழைகள் வளர்ந்துள்ளதால், விரைவில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், சில கிராமங்களில் விவசாயிகள் மழையை, சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடியில் ஈடுபடுவதை தொடர்ந்துள்ளனர்.

Related Stories: