உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

பியாங்யாங் : வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சுமந்து செல்லும் காணொளி வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு அடுத்து மிக முக்கிய தலைவராக அறியப்பட்டவர் ராணுவ மார்ஷல் Hyon Chol-hae என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் உயிரிழந்த அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற அதிபர் கிம், அதிகாரிகள், வீரர்களுடன் சேர்ந்து உடல் இருந்த சவப்பெட்டியை சோகத்துடன் தூக்கிச் சென்றார்.

அவரது பெயர் என்றென்றும்  நினைவுக்கூறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் ஓமிக்ரான் வகை தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்ற அதிபர் கிம் முகக்கவசம் அணியாமல் இருந்ததும் பேசு பொருளாக மாறியுள்ளது. களையிழந்த முகத்துடன் காணப்பட்ட அவர், தொற்று குறித்த அச்சம் இல்லாமல் இருந்தாரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: