இங்லிஷ் பிரிமீயர் லீக் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்

மான்செஸ்டர்: இங்லிஷ் பிரிமீயர் லீக்  கால்பந்து தொடரில் அதிக வெற்றிகளைக் குவித்த  மான்செஸ்டர் சிட்டி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.மொத்தம் 20 அணிகள் களம் கண்ட இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. கடைசி சுற்று லீக் ஆட்டங்கள்  இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்தன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த  மான்செஸ்டர் சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா அணியை வீழ்த்தியது.

மான்செஸ்டர் சிட்டி 38 ஆட்டங்களில் 29 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன்  93 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததுடன் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. 2வது இடத்தில் இருந்த லிவர்பூல் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வோல்வேஸ் அணியை 3-1 என வீழ்த்தியது. எனினும் 38 ஆட்டங்களில் 28 வெற்றி,  8 டிரா, 2 தோல்வியுடன் 92 புள்ளிகள் பெற்ற லிவர்பூல் நூலிழையில் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்து 2வது இடத்துடன் திருப்தியடைந்தது.

Related Stories: