ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

ஜகர்தா: 11வது ஆசிய கோப்பை ஹாக்கி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. `ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா, `பி’ பிரிவில் மலேசியா, தென்கொரியா, ஓமன், வங்கதேசம் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது சுற்றுக்கு தகுதி பெறும். 2வது சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும். முதல் நாளான இன்று 4 போட்டிகள் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தபோட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடக்கிறது. காயத்தால் ரூபிந்தர்பால் சிங் விலகிய நிலையில் பிரேந்திர லக்ரா தலைமையில் இந்தியா களம் இறங்குகிறது.

Related Stories: