ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?

ஐதராபாத்: ஜூனியர் என்டிஆருடன் பான் இந்தியா படத்தில் நடிக்க தீபிகா படுகோன் மறுத்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை கொரட்டால சிவா இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படம் என்பதால், பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்கனவே நடித்திருப்பதால், அலியா பட்டை இதில் நடிக்க வைக்க திட்டமிட்டனர். அவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். திடீரென்று காதலன் ரன்பீர் கபூருடன் திருமணம் நடந்ததால் படத்தில் இருந்து அலியா பட் விலகிவிட்டார். இதையடுத்து தீபிகா படுகோனிடம் பேசப்பட்டது. இந்தி படங்களுடன் வெளிநாட்டு படங்களிலும் நடிப்பதால், தீபிகா படுகோன் கால்ஷீட் பிரச்னையை காரணம் சொல்லி, இதில் நடிக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்தார். இதனால், வேறொரு பாலிவுட் ஹீரோயினை படக்குழு தேடி வருகிறது.

Related Stories: