பந்தலூர் அருகே யானை வழித்தடத்தில் இருந்த சோலார் மின்வேலி அகற்றம்

பந்தலூர்:  பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் கோட்டப்பாடி பகுதியில் யானை வழித்தடத்தில் அமைக்கப்படிருந்த சோலார் மின்வேலியை வனத்துறையினர் அகற்றினர். பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம், நெல்லியாளம் பிரிவு, ஏலமன்னா காவல் பகுதி அய்யன்கொல்லி  கோட்டப்பாடி பகுதியில் பொடியோட்டா காப்புக்காடு, சேரங்கோடு ஒன்று கிராமத்தில் பெருமாள் என்பவர் நில ஆக்கிரமிப்பு செய்து யானை நடமாட்டம் உள்ள பகுதியில் சோலார் மின் வேலி அமைத்திருந்தார்.

அதனை அகற்றம் செய்யவேண்டும் என தமிழ்நாடு வனச்சட்டம்  1882 ஆக்ட் 5 பிரிவு 68 ‘ஏ’  -ன் படி அறிவிப்பு நோட்டீஸ் கடந்த மாதம் 29ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் அவர் சோலார் மின் வேலியை தாமாகவே முன் வந்து அகற்றல்லை. இதனையடுத்து நேற்று  பிதர்காடு வனச்சரகம் உதவி வனப்பாதுகாவலர் பயிற்சி  கிருபாகரன் தலைமையில்  வனக்குழுவினர்கள் மற்றும்  வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறையினர்  முன்னிலையில்  ஆக்கிரமிப்பில் இருந்த சோலார் மின் வேலி அகற்றப்பட்டது.

Related Stories: