ஆதிரெங்கம் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி மும்முரம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சி நாகலுடையான் இருப்பு பகுதியில் கடந்த இருபது வருடங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் முறையான நீர்தேக்க தொட்டி இல்லாததாலும், இந்த பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. குடிநீர் பிரச்னையை சரி செய்ய புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் வீரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், துணை தலைவர் பொற்செல்வி, செல்லபாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: