அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை

ஆவடி: அண்ணனூர் ரயில் நிலையம் அருகே போலீசாரின் வாகன சோதனையில் பிரபல திருடன் சிக்கினான். அவனது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே திருமுல்லைவாயல் உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அம்பத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமு(25). இவரது நண்பர் மாயவன்(20) இருவரும் கடந்த 28ம் தேதி அண்ணனூர் சிவசக்தி நகர் சுகுணா டெய்லர் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் மற்றும் பட்டுப்புடவை திருடியது தெரியவந்தது. மேலும் ராமுவின் மீது ஸ்ரீபெரும்புதூர், வில்லிவாக்கம், திருவள்ளூர் போன்ற காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான உள்ள அவரது கூட்டாளி மாயவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: