17 கோடி பாக்கியை தராவிட்டால் முதல்வரின் பாதுகாப்புக்கு வாகனம் அனுப்ப முடியாது: ஆந்திர போக்குவரத்து துறை அதிரடி

திருமலை: ஆந்திர மாநில அரசுக்கு அம்மாநில போக்குவரத்து துறை நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கு ₹17 கோடியே 5 லட்சம் மாநில அரசு செலுத்த வேண்டி உள்ளது. இந்த தொகை கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதனை உடனே செலுத்தாவிட்டால் முதல்வர், முக்கிய பிரமுகர்களின் சுற்றுப் பயணத்திற்கு வாகனங்களை வழங்க முடியாது. முதல்வரின் மாவட்ட சுற்றுப் பயணங்கள் விரைவில் தொடங்க உள்ளது.

ஆகையால், நிலுவை தொகையை உடனே செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணத்திற்கு ரூ.4.5 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து, போக்குவரத்து துறைக்கு செலுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. முதல்வருக்கே வாகனங்கங்களை வழங்க முடியாது என போக்குவரத்து துறை கூறி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது  மாநில அரசுக்குதான் அவமானம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Related Stories: