முறைகேடாக நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி நியமனம் தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், ‘அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அதேப்போன்று கடந்த 05.12.2016ம் ஆண்டு முதல் இன்று வரையில் மாற்றுக் கட்சிக்கு செல்லாத நபர்களின் பட்டியலை தயார் செய்தும், குறிப்பாக 5வருடம் கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்த ஒருவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க ஆணையம் உத்தரவிட வேண்டும்.

மேலும் தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்து வருபவர்கள் பொதுச்செயலாளரின் நிர்வாக அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டவும், அதேப்போன்று கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் தடை விதிக்க வேண்டும். இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு சமீபத்தில் முறைகேடாக நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் நியமனங்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: