கியூபாவில் பயங்கரம் எரிவாயு கசிவால் வெடித்து சிதறிய நட்சத்திர ஓட்டல்: 25 பேர் பரிதாப பலி

ஹவானா: கியூபாவில் பாரம்பரியமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரகோடா என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. மிகவும் பிரபலமான இந்த ஓட்டலில்தான், அமெரிக்க அரசு அதிகாரிகள், விஐபிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்குவது வழக்கமாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. 96 அறைகளை கொண்ட ஓட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். மேலும் 74 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் அருகில் இருந்த பள்ளி கட்டிடம் சிறிதளவு சேதமடைந்தது. இதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் ஓட்டலில் இயற்கை எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. விபத்து நடத்த சமயத்தில் ஓட்டல் ஊழியர்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் மிகால் தியாஸ் கானெல், ‘‘இது வெடிகுண்டு அல்லது தாக்குதல் சம்பவம் கிடையாது. இது ஒரு சோகமான விபத்து’’ என்றார்.

Related Stories: