திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் காளைகள் பங்கேற்றன. காளைகளை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது ஒரு சில இளைஞர்களிடம் பிடிபட்ட நிலையில், பெரும்பாலான காளைகள் தப்பித்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் ஓடியது. காளைகள் முட்டியதில் 74 பேர் காயமடைந்தனர்.
