அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை வைகைக்கரையோரம், கேரளா மாநில கோயில்களின் வடிவமைப்பில் பச்சை நாயகி அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1ம் தேதி மதுரை ராஜா பட்டர் தலைமையில் விக்னேஸ்வரர் பூஜையுடன், முதல் கால யாக சாலை துவங்கியது.

இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிந்து, கடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தன. தொடர்ந்து காலை 6.30 மணியளவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும், சிறப்பு பூஜைகள் நடந்தன. அர்ச்சகர் சிவராம சுப்பிரமணியன் பிரசாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: