சாதாரண பயனர்களுக்கு மட்டும் சலுகை; டுவிட் போட்டால் இனிமேல் காசு... எலோன் மஸ்க் திடீர் முடிவு

சான்பிரான்சிஸ்கோ: சாதாரண பயனர்கள் தவிர வணிகம் மற்றும் அரசு நிறுவனங்கள் டுவிட்டரில் பதிவுகளை போட்டால், கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதன் தலைவர் எலோன் மஸ்க் கூறி உள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இவர் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் பல பெரிய மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தில் இருந்த இந்தியரான தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், பாலிசி  தலைவர் விஜயா காடே ஆகியோர் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் எலோன் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், ‘இனி வரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது. அதைப் பயன்படுத்த நீங்கள் கொஞ்சம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கும். அவர்கள் வழக்கம்போல் டுவிட்டரை பயன்படுத்தலாம். அதேநேரம் வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்களிடம் இருந்து சிறிய அளவிலான கட்டண தொகையை வசூலிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: