மும்பை: ஐபிஎல் தொடரில் 42வது லீக் போட்டியில் இன்று புனே எம்சிஏ மைதானத்தில் லக்னோ-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக்கில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அந்த போட்டியில் கேப்டன் ராகுல் சதம் விளாசினார். லக்னோ அணியில் கேப்டன் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ் நல்ல பார்மில் உள்ளனர். பஞ்சாப் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.