அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

சென்னை: பேரவையில் எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடப்பு 2022-23ம் ஆண்டில் 50,000 எண்ணிக்கை புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கைம்பெண், மலைவாழ் மக்கள், கலப்பு திருமணம் செய்தோர், முன்னாள், இன்னாள் ராணுவத்தினர், முன்னாள் மற்றும் இன்னாள் துணை ராணுவத்தினர் ஆகியோரின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு 2022-23ம் ஆண்டிலேயே வழங்கப்படும்.

* திருவாரூர் தியாகராஜர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் ஆகிய கோயில்களின் தேரோடும் நான்கு மாட வீதிகளில் உள்ள மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படும்.

* தடையற்ற மின்சாரம் தமிழக மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

* எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்தில் புகை போக்கி வளிம கந்தக நீக்கும் அமைப்பு நிறுவப்படும்.

* பேசின்பாலம் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையத்தில் 2*30 மெகாவாட் அலகுகளை நாப்தாவில் இருந்து திரவ நிலை எரிவாயுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: