இனவெறி குற்றசாட்டு ஸ்மித், பவுச்சர் விடுவிப்பு

ஜோகன்னஸ்பெர்க்: இனவெறி குற்றச்சாட்டுகளில் இருந்து தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன்கள் கிரீம் ஸ்மித், மார்க் பவுச்சர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பவுச்சர் இப்போது தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஸ்மித், பவுச்சர் இருவரும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களாகவும் இருந்தனர். ஸ்மித் பதவிக் காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. அவர் பதவிக் காலத்தில் இனவெறி பாகுபாட்டுடன் அணித் தேர்வில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இரு நபர் குழு, தனது அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், ‘ஸ்மித்  இனவெறியுடன் செயல்படவில்லை’ என அவரை கிரிக்கெட் வாரியம் விடுவித்துள்ளது. மேலும், 2012, 2014ல் முன்னாள் வீரர் தாமி மீது இனவெறி காட்டியதாக வந்த புகாரிலும் உண்மை இல்லை. பயிற்சியாளர் பதவிக்கு பவுச்சரை தேர்வு செய்ததிலும் எந்த முறைகேடும் இல்லை என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. இனவெறி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையிலும், 2019-2022 மார்ச் வரை தெ.ஆப். கிரிக்கெட் வாரிய இயக்குநராக ஸ்மித் தொடர்ந்து பதவி வகித்தார். இப்போது குற்றச்சாட்டில்  இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இயக்குநராக அல்லது புதிய பதவியில் அவர் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: