ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை: உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்..வேதாந்தா தலைவர்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை என்று வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்தார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆலை மூடப்பட்டது.

மேலும் ஆலையில் இருந்து வெளியான கழிவுளின் காரணமாக அப்பகுதியில் மண் மாசுபாடு ஏற்பட்டு நிலத்தடி நீர் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் ஆலை கழிவுகளை அகற்றும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வலுத்துள்ளது. இந்த ஆலை தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஆலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க பல மாநிலங்கள் அழைப்பு விடுத்த போதும் தூத்துக்குடியில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை என கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: