தீக்குச்சி தாஜ்மகால்

நன்றி குங்குமம் தோழி

தாஜ்மகால் என்றாலே பளபளப்பும் மினுமினுப்பும் தான் நமக்கு ஞாபகம் வரும். அதுவும் இரவில் அந்த கட்டிடத்தை காண கண்கோடி வேண்டும். இப்போது 22 வயது நிரம்பிய மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் பெண் சஹேலி பால் என்பவர் தீக்குச்சிகளால் தாஜ்மகாலை வடிவமைத்துள்ளார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார் சஹேலி. இவரது பொழுது போக்கே தீக்குச்சிகளால் சிற்பங்களை வடிவமைப்பது தான். கடந்த 2013ம் ஆண்டில் யுனேஸ்கோவின் சின்னத்தை தீக்குச்சிகளை கொண்டு உருவாக்கியிருந்தார். இதற்கு  அவருக்கு தேவைப்பட்டது ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 951 தீக்குச்சிகள். இப்போது தீக்குச்சிக் கொண்டு உருவாக்கியுள்ள தாஜ்மகாலை கின்னஸ் சாதனைக்காக படைக்க இருக்கிறார்.

இதை வடிவமைக்க சஹேலுக்கு வெறும் 15 நாட்கள் போதுமானதாக இருந்ததாம். பார்த்ததுமே நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும்

விதமாக காட்சியளிக்கும் இந்த தாஜ்மகாலை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ல் நிறைவு செய்துவிட்டார். மூன்று லட்ச தீக்குச்சிகள் இந்த தாஜ்மகால் சிற்பம் அமைக்க தேவைப்பட்டதாம். 6 அடி நீளம் 4 அடி உயரம் என்ற அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த சிற்பத்தை விரைவில் கின்னஸ் சாதனைக்காக வீடியோ எடுத்து அனுப்ப உள்ளார்.

சஹேலியின் சொந்த ஊர் மேற்கு வங்காளத்தில், குர்னி பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர். இவரின் தந்தை சுபீர் பாலும் சிற்பக்கலைஞர். இவர் கடந்த 1991ம்

ஆண்டு சிறந்த சிற்பக்கலைஞர் என ஜனாதிபதி விருதினை பெற்றவர். சஹேலியின் தாத்தா பிரேன் பால் கடந்த 1982ம் ஆண்டு ஜனாதிபதி விருதினை சிறந்த சிற்பக் கலைஞருக்காக பெற்றுள்ளார்.  சஹேல்  துர்க்கை அம்மனின் முகத்தை களிமண்ணில் வரைந்து சாதனை படைத்துள்ளார். அந்த சிலையின் எடை 2.3 கிராம் கொண்டது. அதுவும் கடந்த 2018ல் உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: