பொன்பாடி சோதனைசாவடியில் கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் சோதனை நடத்தி, கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரின் உத்தரவின்படி, கூடுதல் எஸ்பி சாய்பிரனீத் மேற்பார்வையில், திருத்தணி போலீஸ் ஏட்டு ஆறுமுகம் தலைமையில் போலீசார் இன்று காலை பொன்பாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த வாகனத்தில் சோதனை நடத்தியபோது கஞ்சா பொருட்கள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, கஞ்சா கடத்திவந்ததாக திருத்தணி ஜோதி நகரை சேர்ந்த சஞ்சய் (எ)சஞ்சய் குமார் (23), சக்கரைசெல்வன் (19) மற்றும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நித்திஸ் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு மூவரையும் திருத்தணி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமராஜியிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.

Related Stories: