தமிழ் கற்பிக்கும் செயலி உருவாக்கபடும்: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் சங்க இலக்கிய நூல்களில் உள்ள வாழ்வியல் தத்துவங்களை பல்வேறு வண்ணங்களில் ஓவியமாக வரைந்து அதை எழில் ஏடாக வெளியிட 15 லட்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள் மூலம் ஓவியம் வரைய உள்ளதாக கூறியுள்ளனர். கொள்கை விளக்க குறிப்பில் தமிழ் கற்பிக்கும் செயலி உருவாக்கம் பணி நடைபெறுவதாகவும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் தமிழ் கற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தமிழ் கற்பிக்கும் பாடம் மற்றும் பன்மொழி அகராதி உள்ளடக்கிய திறன்மிகுந்த குறுஞ்செயலி உருவாக்கம் பணி நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: