நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தும் நிறுவனங்கள்

நாகர்கோவில்: தொலை தொடர்பு சேவை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான ஒன்றாக மாறிவிட்டது இதனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் நாளுக்கு நாள் தொலை தொடர்பின் வேகத்தை அதிகரித்து வருகின்றன இதனால் பூமிக்குள் போடப்பட்டு இருந்த கேபிள்களின் தரத்தை உயர்த்தி புதிய கேபிள்கள் போடும் பணிகள் நகர பகுதியில் நடந்து வருகிறது கடந்த காலங்களில் தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்களது நெட் மற்றும் போன் இணைப்பு கேபிள்களை சாலையோரம் பூமிக்குள் பதித்தன இதில் தொழிலாளர்கள் சாலைஓரம் பள்ளம் தோண்டி கேபிள்களை பதித்து வந்தனர் தற்போது இயந்திரம் கொண்டு ஆழ்துளை கிணறு அமைப்பது போன்று சாலையின் ஓரத்தில் ஒரு இடத்தில் பள்ளம்தோண்டி சாலையின் கீழ் பகுதியில் கேபிள்கள் பதிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று மாநகர பகுதியில் இந்த கேபிள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன இப்படி இயந்திரம் கொண்டு கேபிள்கள் பதிக்கும்போது தரையின்கீழ் போடப்பட்டு இருக்கும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து வருகிறது ஆனால் எந்த பகுதியில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது என காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது சில நிறுவனங்கள் கேபிள் பதிக்கும் பணியை செய்து வருகின்றன வடசேரி அண்ணா சிலை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேபிள் பதிக்கும் பணி இயந்திரம் மூலம் நடந்தது அப்போது தரையின் கீழ் போடப்பட்டு இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதனை தொடர்ந்து அந்த குழாயில் செல்லும் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு தற்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளது. 3 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை காணமுடியவில்லை இதனால் பள்ளம்தோண்டப்பட்டு அப்படியே உள்ளது. பள்ளங்களின் இருபுறமும் பேரிகார்டு அமைக்கப்பட்டு உள்ளது. குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வடசேரி பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: