கெய்ரோ: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் பெற்று மோசடி செய்த மெகுல் சோக்சி மற்றும் அவரது மருமகனான வைர வியாபாரி நிரவ் மோடி ஆகியோர் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறினர். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவரது ஊழியர் சுபாஷ் சங்கர் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை இன்டர்போல் வெளியிட்டது.
