திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 14 கி.மீ. கிரிவலப்பாதையில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

*1,400 பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப்பாதையில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி நேற்று நடந்தது. அதில், 1,400 பேர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 16ம் தேதி நடக்கிறது. சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கான தடை 2 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, சித்ரா பவுர்ணமி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், 14 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாைதயை முழுமையாக தூய்மைப்படுத்தும், ஒட்டுமொத்த தூய்மைப்பணி நேற்று நடந்தது. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில், தேரடி வீதியில் தூய்மைப்பணியை கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூய்மைப்பணியில், எஸ்பி பவன்குமார், எம்எல்ஏ மு.ெப.கிரி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், மாவட்ட வனஅலுவலர் அருண்லால், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தரன், ப.கார்த்தி வேல்மாறன், துரை.வெங்கட், பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரத்தில, ஒரு கி.மீ. தூரத்துக்கு 100 பேர் வீதம் தனித்தனியே குழு அமைக்கப்பட்டு, ஒட்டுமொத்த தூய்மைப்பணி நடந்தது. அதில், தூய்மை அருணை உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், மற்றும் நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் என 1,400 பேர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய தூய்மைப்பணி மதியம் 12 மணி வரை தொடர்ந்து நடந்தது. தூய்மைப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு, அண்ணாமலையார் கோயில் சார்பில் மோர், பழச்சாறு போன்றவை வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த தூய்மைப்பணியால், கிரிவலப்பாைத புதுப்பொலிவு பெற்றுள்ளது. சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிந்ததும் வரும் 18ம் தேதி மீண்டும் இதேபோல் ஒட்டுமொத்த தூய்மைப்பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: