கிள்ளியூர் அருகே ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்

கருங்கல்: கிள்ளியூர் ஒன்றியம் கொல்லஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குட்டி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகள் பழமையானது. இந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் உரிய பராமரிப்பின்றி நாளுக்குநாள் சிதிலமடைந்து வருகிறது. மேலும் கூரைப்பகுதியில் இருந்து காங்கிரீட்  பெயர்ந்து விழுந்து வருகிறது.

அதுபோல உள்ளே செல்லும் கதவு பொருத்தப்பட்டுள்ள கட்டளையின் கீழ்ப்பகுதி கரையான்கள் அரித்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த மையத்துக்கு அனுப்ப பெற்றோர் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கட்டிடத்தின் நிலை குறித்து ெகால்லஞ்சி ஊராட்சி தலைவர் சலோமி மற்றும் ஊர் பொது மக்கள் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பயிலும் குழந்ைதகளின் நலன்கருதி, புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் தற்காலிகமாக இந்த மையத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: