அவசரப்பட்டு கூறி விட்டார்கள் மும்பையில் பரவியது எக்ஸ்இ வைரஸ் அல்ல: ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம்

மும்பை: இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் ‘எக்ஸ்இ’ என்ற புதிய உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி, மும்பையில் கண்டறியப்பட்டுள்ளார் என, மும்பை மாநகராட்சி நேற்று முன்தினம் அறிவித்தது. தென்னாப்ரிக்காவில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி, மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு இருந்தது, இங்கிலாந்தில் கடந்த ஜனவரியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட எக்ஸ்இ வகை கொரோனா என்பது தெரிய வந்தது என, மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி தெரிவித்திருந்தார்.

இதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா அரசு அவசரப்பட்டு எக்ஸ்இ வகை கொரோனா என கூறிவிட்டது. துவக்கத்தில் நாங்களும் இதை எக்ஸ்இ வகை என்றுதான் நினைத்தோம். ஆனால், கூடுதல் ஆய்வுக்காக இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) ஆய்வுக்காக அனுப்பியபோது, அந்த மாதிரி, கொரோனா எக்ஸ்இ வகையை போன்றதாக தோற்றம் அளிக்கவில்லை,’’ என்றார். இருப்பினும், இதை மேலும் உறுதியாக உறுதிப்படுத்துவதற்காக, மேற்கு வங்கத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு அமைப்புக்கு இந்த நோயாளியின் மாதிரி அனுப்பப்பட உள்ளது.

Related Stories: